• சிறப்பு தினங்கள்

  •   பிறை 6 : அஷ்ஷெய்கு காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி (ரழி) நினைவு தினம்.
  •   பிறை 13: இமாம் இப்னு ஹஜர் (ரழி) அவர்களது நினைவு தினம்.
  •   பிறை 22:  இமாம் ஷாம் ஷிஹாபுத்தீன் (ரழி)அவர்களின் நினைவு தினம்.
  •   பிறை 25:  இமாம் முஸ்லீம் (ரழி) அவர்களது நினைவு தினம்
  •   பிறை 27: புனித மிஃராஜ் தினம்.
  •   பிறை 28: இமாம் புஹாரி (ரழி) நாயகத்தின் நினைவு தினம்.
  •   பிறை 29: இமாம் ஷாபிஈ (ரழி) அவர்களது நினைவு தினம்.
  •   பிறை 30: புனித அபூர்வ துஆ ஓதப்படும்.

  190_Bis111

மஜ்லிஸூல் புஹாரி ஷரீப் ஒர் சிறப்புப் பார்வை

 
தோற்றம்
தென்னிந்தியா  தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோர்கள் பலரால் உருவாக்கப்பட்ட பலப் பெருமையுடைய நிறுவனங்களும் உண்டு.
ஆம் அதில் ஒன்று தான் பூமான் நபியின் புனித ஹதீது மணிமொழிகள் வாய் மணக்க ஓதி மகிழும் எழில் மன்று புனித பஹாரி ஷரீப்

துவக்க நிலை
காயல் நகரின் கல்விக் கடல் காருண்ணிய மாமேதை அல்லாமா பெரிய முத்து வாப்பா (ஒலியுல்லா) அவர்களின் மக்பரா ஷரீபில் வைத்து 1929ம் ஆண்டு இந் நிகழ்வு துவக்கப்பட்டது.
அல்ஜாமிவுல் ஸஹீஹூல் புஹாரி எனும் புஹாரி ஷரீப் கிரந்தமதை ஓதப்பட்டு வந்தது.

1941ம் ஆண்டு அதற்கென புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. கால சூழலுக்கேற்ப இக்கட்டிடம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.

Read More...